சினிமா செய்திகள்
முதன்முறையாக இரட்டை வேடங்களில் ‘ஹிப்ஹாப்’ ஆதி… பட அப்டேட்!

முதன்முறையாக ஹிப்ஹாப் ஆதி தான் ஹீரோ ஆக நடிக்கும் அன்பறிவு படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளராம்.
அன்பறிவு படத்தில் ஹிப்ஹாப் ஆதி-க்கு ஜோடியாக நடிகை காஷ்மிரா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் விதார்த், நெப்போலியன், ஊர்வசி, சங்கீதா கிரிஷ், போன்ற முன்னணி நட்சத்திரங்களும் உள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வின் இயக்குகிறார்.
கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்றதொரு குடும்பப்பாங்கான ஜாலியான திரைப்படமாக அன்பறிவு இருக்கும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் முழுவதும் கிராமத்து மதுரைப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. ஆதி மதுரை மொழி நடையிலும் கிராமத்து கதாநாயகனாக இத்திரைப்படத்தில் பார்க்கலாம் என அறிமுக இயக்குநர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக இந்தப் படத்தில் ஆதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அன்பறிவு படத்துடன் ‘சிவக்குமாரின் சபதம்’ என்னும் படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கிறார் ஆதி. சிவக்குமாரின் சபதம் படத்தின் இயக்குநரும் ஹிப்ஹாப் ஆதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.















