வணிகம்
Freshers-களுக்கு அடித்தது ஜாக்பாட்.. சம்பளத்தை உயர்த்தும் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்!

2022-2023 நிதியாண்டில் மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், Freshers-களுக்கான சம்பளத்தை 3.5 லட்சம் ரூபாயிலிருந்து 4.25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகளவில் வெளியேறும் போது attrition மதிப்பு அதிகரிக்கப்படும். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் attrition மதிப்பு 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. ஊழியர்களைச் சரியாக பார்த்துக்கொள்ளும் ஒரு நிறுவனம் என்றால் attrition மதிப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஹெச்.சி.எல் தற்போது எடுத்துள்ள முடிவால் வரும் காலாண்டுகளில் attrition மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படும். மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் ஹெச்.சி.எல் ஒப்பந்தமும் போட்டுள்ளது. அந்த கல்வி நிறுவனங்களில், ஹெ.சி.எல் வழங்கும் பாட திட்டங்களையும் படித்து சான்றிதழ் பெற்ற Freshers-களுக்கு, 6 லட்சம் ரூபாய் வரையில் குறைந்தபட்சம் சம்பளம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு Freshers-களுக்கு சம்பளம் உயர்வு அதிகம் வழங்கப்பட்டது. அதனால் ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 23,000 Freshers-களை பணிக்கு எடுத்துள்ளோம். அது 34,00 வரை அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் Freshers-கள் எண்ணிக்கை 11 சதவீதமாக அதிகரிக்கும்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 27 சதவீதமும் டிசிஎஸ் நிறுவனத்தில் 16 சதவீதமும் Freshers-கள் பணியில் உள்ளார்கள்.