Connect with us

இந்தியா

10 நிமிடத்தில் வந்துவிடுவேன்.. அம்மாவிடம் பேசிய சிறிது நேரத்தில் பரிதாபமாக பலியான இளம்பெண்!

Published

on

நேற்று டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடிய 20 வயது இளம்பெண் ஒருவர் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறிய நிலையிலும் அடுத்த சில நிமிடங்களில் கார் மீது மோதி 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியில் புத்தாண்டு கொண்டாட சென்றிருந்த நிலையில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு அவர் தனது அம்மாவிடம் செல்போனில் இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று பேசியுள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது கார் ஒன்று ஸ்கூட்டி மீது மோதியதால் அந்த ஸ்கூட்டியோடு அவர் 12 கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றதாக தெரிகிறது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 3:24 மணிக்கு கார் ஒன்று ஸ்கூட்டியோடு ஒரு பெண்ணை இழுத்துச் செல்வது செல்லும் தகவல் வந்தது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்த்த போது இளம் பெண்ணின் சடலம் கிடைத்தது.

அந்த பெண்ணின் உடல் முழுவதும் ஆடைகள் கிழிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டபோது நிர்வாணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர். கார் ஸ்கூட்டியை இழுத்து சென்றதே காரில் உள்ளவர்களுக்கு தெரியாது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர், இருப்பினும் காரில் உள்ள ஐந்து பேரும் மது அருந்தி இருந்ததாகவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் தான் இந்த விபத்தில் இறந்ததாகவும் ஐந்து பேரையும் கைது செய்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் தற்செயலாக நடந்த ஒரு விபத்தை பாலியல் வன்கொடுமை சம்பவம் போல ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்றும் அவை தவறானவை என்றும் அத்தகைய பதிவை பகிர்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இறந்த பெண்ணின் மாமா பிரேம் சிங் என்பவர் கூறிய போது, ‘தனது அக்காவின் மகள் அஞ்சலி இறந்துவிட்டதாக எங்களுக்கு காலை 7 மணிக்கு தகவல் வந்தது என்றும் என் சகோதரியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும் விபத்து நடந்த இடத்தை அவருக்கு காட்டவில்லை என்றும் காரின் பக்கவாட்டில் ரத்தம் இருந்ததை நாங்கள் பார்த்தோம் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு நிர்பயா வழக்கு போன்றது என்றும் எங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?