கிரிக்கெட்
தோனி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்: கௌதம் கம்பீர் பரபரப்பு பேட்டி!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்திய அணியில் தோனியின் ஓய்வு குறித்து பேச்சு அதிகமாக உலா வருகிறது. ஆனால் இதுவரை தோனியோ, பிசிசிஐயோ இதுவரை ஓய்வு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தோனிக்கு பதிலாக இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட உள்ளார் என பரவலாக கருத்துக்கள் வலம்வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி அறிவிப்பில் இந்த குழப்பத்துக்கான முடிவு கிடைக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரரும் எம்பியுமான கௌதம் காம்பீர் பேசியுள்ளார். அதில், தற்போது எதிர்காலத்தை பற்றி யோசிப்பது மிகவும் முக்கியமானது. தோனி கேப்டனாக இருக்கும்போது, வருங்காலத்தைப் பற்றி யோசித்தார். அதனால் தான் சச்சின், சேவாக், மற்றும் என்னை சிபி சீரியஸ்சில் இணைந்து விளையாட அனுமதிகவில்லை. காரணம் அவர் 2019 உலகக் கோப்பைக்காக இந்திய அணியில் எங்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராகி இருந்தார்.
எமோசனல் ஆவதை விட செய்முறை முடிவுகளை எடுப்பது அவசியம். தற்போது இளம் வீரர்கள் வளர வேண்டிய நேரம். ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அல்லது மற்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களோ? அவர்களை விக்கெட் கீப்பராக உருவாக்க வேண்டும் என பேசியுள்ளார்.




















