இந்தியா
பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து!

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட உடனே 9 தீயணைப்பு வாகனங்கள், டெல்லி லோக் கல்யாண் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி விரைந்தன.
ஆனால் அது பெரிய தீ விபத்து ஏதுமில்லை என்று, பாதுகாப்பு கருதித் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் தகவல்கள் கூறுகின்றன.
டெல்லி தீயணைப்புத் துறை இயக்குநர் இது குறித்து பிடிஐக்கு தெரிவித்ததில், “மோடி இல்லத்தில் உள்ள யூபிஎஸ்-ல் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்தே ஆகு. பாதுகாப்பு கருதித் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன. மோடி இல்லத்திற்கும், அலுவலகத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.