உலகம்
750 பில்லியன் சொத்துக்களை இழந்த முதல் தொழிலதிபர்.. எலான் மஸ்க்கிற்கு இப்படியும் ஒரு சாதனையா?
Published
1 month agoon
By
Shiva
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் உள்பட பல்வேறு சாதனைகளை செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது 200 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்த தொழிலதிபர் என்ற மோசமான சாதனையையும் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்று இருந்த எலான் மஸ்க் சமீபத்தில் பிரெஞ்ச் தொழிலதிபர் முதலிடத்தை பிடித்தார் என்பதும் தற்போது எலான் மஸ்க் இரண்டாவது இடத்தில் தான் உள்ளார் என்பதையும் பார்த்தோம்.
எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு படிப்படியாக சரிந்து வரும் நிலையில் அவரது சொத்து மதிப்பும் சரிந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி எலான் மஸ்க் அவர்களின் சொத்து மதிப்பு 340 பில்லியன் என இருந்த நிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு வெறும் 137 பில்லியன் மட்டுமே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில மாதங்களில் அவர் சுமார் 200 பில்லியன் சொத்துக்களை இழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 7,500 கோடி என்றால் 200 பில்லியன் டாலர் என்பது எவ்வளவு என்பதை நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது, டெஸ்லா கார்களுக்கு போட்டியாக பல கார்கள் அறிமுகமாகி வருவது, டுவிட்டர் நிறுவனத்திற்காக 44 பில்லியன் கொடுத்து வாங்கியது உள்பட பல்வேறு காரணங்களால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு குறைந்து விட்டதாக கணிக்கப் பட்டுள்ளது.
You may like
-
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டு வந்தது கங்கனாவின் ட்விட்டர் … முதல் ட்விட்டே என்ன தெரியுமா?
-
93% சொத்துக்களை இழந்த ஆசியாவின் 2வது பணக்காரர்… என்ன காரணம்?
-
மீண்டும் டுவிட்டரில் வேலைநீக்க நடவடிக்கை.. கொடுத்த வாக்கை காப்பாற்றாத எலான் மஸ்க்!
-
நீதிமன்றம் செல்கிறார்களா வேலைநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் ஊழியர்கள்.. சிக்கலில் எலான் மஸ்க்
-
இனி டீசர், டிரைலர்களை டுவிட்டரில் பதிவு செய்ய முடியாதா? எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!
-
தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. ரூ.2.69 கோடி மோசடி செய்த இளம்பெண்