இந்தியா
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் திருத்தம் எஸ்.ஐ.ஆர். முடிந்தது – வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587. இதில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு எஸ்.ஐ.ஆர. படிவங்கள் விநியோகிக்கப் பட்டன. இவற்றில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 படிவங்கள் பெறப்பட்டு பதிவேற்றப் பட்டன. இதில் உயிரிழந்தவர்கள் நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இரட்டைப் பதிவு வாக்காளர்கள் ஆகியோர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்பட்டோர் விவரங்களும் அதில் இடம் பெற்றிருக்கும். நீக்கப்பட்டதற்கான காரணமும் அதில் இடம் பெற்றிருக்கும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று பிற்பகல் 2 மணிக்கு அதிகாரபுர்வமாக வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் திருமதி.அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இப்பட்டியல் தொடர்பான தங்களது ஆட்சேபனைகள் மற்றும் திருத்தங்களை ஜனவரி 18 வரை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவற்றின் மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு பிப்ரவரி 10 வரை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
- வாக்குச்சாவடிநிலை அலுவலர் (BLO) வைத்துள்ள வாக்காளர் பட்டியலில் சரிபார்க்கலாம்.
- ECINETமொபைல் செயலி மூலம் சரிபார்க்கலாம்.
- voters.eci.gov.inஇணையதளத்தில் சரிபார்க்கலாம்
- தமிழ்நாடுதலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சம்பந்நதப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் சரிபார்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதவர்கள் இதன் பின்னர் புதிய வாக்காளர் பதிவு செய்ய படிவம் 6ம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ம் வாக்காளர் விவரங்கள் புதுப்பிப்பு மற்றும் திருத்தம் செய்ய படிவம் 8ம் புர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரிலோ அல்லது இணையதளம் மூலமோ சமர்ப்பிக்கலாம்.
எந்தவொரு சந்தேகத்திற்கும் கட்டணமில்லா தொலைபேசி வாக்காளர் உதவி எண் 1950 க்கு அழைக்கலாம் இவ்வாறு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.







