சினிமா செய்திகள்
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய உடன் ரகசிய திருமணம் செய்துகொண்ட டேனியல்!
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து டேனியல் நேற்று எவிக்ஷன் மூலம் வெளியேறிய நிலையில் நீண்ட நாளாகக் காதலித்து வந்த டெனிஷாவை பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது டேனி பல முறை டெனிஷாவுடனான தனது காதல் மற்றும் அவர் தன் திரைத் துறை முயற்சிக்கு அளித்த ஊக்குவிப்பு, ஆதரவு குறித்தும் வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் பிரீஸ் டாஸ்க்கின் போது டேனியின் தாய் மற்றும் காதலி இருவரும் வந்த போது அவரது காதலியுடன் நடந்துகொண்ட விதமானது பார்வையாளர்கள் மற்றும் அவரது தாயினையும் முகம் சுழிக்க வைத்தது.
ஆனால் நேற்று பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய டேனி தனது மனைவியை அனைவருக்கும் அறிமுகம் செய்வதாகவும் சில குடும்ப பிரச்சனைகளால் ரகசியமாகப் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் உங்கள் ஆசீர்வாதங்களுடன் எங்கள் வாழ்க்கையை துவங்க விரும்புகிறோம் என்றும் இன்ஸ்டாகிராமில் படத்துடன் பதிவிட்டுள்ளது டிரெண்டாகியுள்ளது.
இந்தியாவில் பதிவு திருமணம் என்று ஒன்று இல்லை, திருமணத்தினை பதிவு செய்வது என்பது மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















