தமிழ்நாடு
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் என வாழ்த்து மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு நாட்டின் உயரிய பொறுப்புகளில் உள்ள பல்வேறு தலைவர்கள் முதல் அனைத்து தரப்பு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.

#image_title
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்த வாழ்த்தில், எனது மார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன் என்றார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்த வாழ்த்தில், எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன் என்றார்.
மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தினர். இவர்களைத்தவிர ராகுல் காந்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியில் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.