வணிகம்
ஊழியர்களின் ஈஎஸ்ஐ பங்களிப்பை 0.75 சதவீதாக குறைத்தது மத்திய அரசு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ஊழியர்களின் ஈஎஸ்ஐ பங்களிப்பை 0.75 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஊழியர்கள் காப்பீடு சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் சம்பளத்தில் இருந்து 1.75 சதவீதமும் பணியை வழங்கிய நிறுவனம் பங்களிப்பாக 4.75 சதவீதமும் என மொத்தமாக 6.5 சதவீதம் சந்தாவாகச் செலுத்த வேண்டும்.
இந்த சந்தா செலுத்தப்படும் ஊழியர்களுக்கு மருத்துவம், இழப்பு காப்பீடு, இறுதி சடங்குக்கு பணம் போன்றவை வழங்கப்படும்.
தற்போது ஜூலை 1 முதல் ஊழியர்களின் பங்களிப்பை 0.75 சதவீதமாகவும், நிறுவனங்கள் பங்களிப்பை 3.25 சதவீதமாகவும் குறைத்து மொத்தமாக 4 சதவீதம் செலுத்தினால் போதும் என மத்திய அரசு குறைத்துள்ளது.
ஊழியர்கள் காப்பிடு சட்டம் 1948-ன் கீழ் மாதம் 21,000 ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த ஈஎஸ்ஐ நன்மையை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
















