கிரிக்கெட்
பிளே ஆஃப் செல்வது பெங்களூரா? டெல்லியா? மும்பை கையில் இருப்பதால் பரபரப்பு
Published
8 months agoon
By
Shiva
ஐபிஎல் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே 69வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. நேற்றைய போட்டியில் சென்னை அணியை வென்றதன் மூலம் ராஜஸ்தான் அணி 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அந்த வாய்ப்பு ராஜஸ்தான் அணிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் பெங்களூர் அணி தற்போது 16 புள்ளிகள் இருக்கும் நிலையில் இன்று டெல்லி அணியுடன் மும்பை மோதுகிறது. டெல்லி அணி 14 புள்ளிகளுடன் இருப்பதால் டெல்லி அணி மும்பையை வென்றாலே பெங்களூரு அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஏனெனில் டெல்லி அணிக்கு தற்போது நல்ல ரன்ரேட் உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் டெல்லி அணியை மும்பை அணி வீழ்த்தி விட்டால் பெங்களூரு அணி பிளே ஆப் செல்லுக்கு சென்றுவிடும் என்பது குறிபிடத்தக்கது. எனவே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது எந்த அணி என்பது இன்று மும்பை கையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது என்றாலும் இந்த போட்டியின் முடிவு புள்ளி பட்டியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடதக்கது.
You may like
-
பெண்கள் ஐபிஎல் வீராங்கனைகளின் ஏலம் எப்போது? ஸ்மிருதி மந்தனா எடுக்க போட்டா போட்டி!
-
பெண்கள் ஐபிஎல்.. அதானி, அம்பானி ஏலம் எடுத்த அணிகள் எவை எவை? முழு விபரங்கள்
-
மும்பை போதை பெண் ஆர்டர் செய்த பிரியாணி ரூ.2500ஆ? என்ன நடந்த்து?
-
பெண்கள் ஐபிஎல்.. ஒரு அணியில் விலை ரூ.450 கோடியா?
-
ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை… சென்னை-டில்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா?
-
2022ல் திருமண கொண்டாட்டம்… இந்தியாவில் அதிக திருமணம் நடந்தது இந்த நகரில் தான்!