Connect with us

ஆன்மீகம்

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு: இலவச தரிசன டிக்கெட் வழங்கும் இடம் மாற்றம்!

Published

on

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் நடைபாதையில் நடந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்று பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இலவச தரிசன டிக்கெட்

பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் 2,083 ஆவது படியில், காளி கோபுரம் அருகில் உள்ள அலுவலகத்தில் இலவச தரிசன டிக்கெட் வழங்கி வந்தனர். தினந்தோறும் அதிகாரிகள் நடந்து சென்று இலவச தரிசன டிக்கெட் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அலிப்பிரியில் நடைபாதை இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்குவதற்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் ஒன்றை அமைத்து, இன்று காலை முதல் பக்தர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கி வருகின்றனர்.

இலவச தரிசன டிக்கெட் வாங்கிச் செல்லும் பக்தர்கள் 1,240 ஆவது படி அருகில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில், இலவச தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து, நேர ஒதுக்கீடு பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உண்டியல் வசூல்

பக்தர்கள் இந்த வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப திருமலை திருப்பதி யாத்திரையை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். திருப்பதியில் நேற்று ஒருநாளில் மட்டும் 67,687 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 25,090 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். ரூ 3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?