சினிமா செய்திகள்
இரண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆனது ‘அண்ணாத்த’: ரசிகர்கள் உற்சாகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு விமர்சகர்கள் நெகட்டிவாக விமர்சனம் தந்தாலும் பொதுமக்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் திரையரங்குகளில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ரிலீஸான 10 நாட்களில் 200 கோடி வரை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதும் இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடியிலும் ‘அண்ணாத்த’ திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
இதனை அடுத்து இதுவரை திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடியில் ‘அண்ணாத்த’ படத்தை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து தான் ஓடிடியில் ரிலீசாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்திருந்தனர். இருப்பினும் ‘அண்ணாத்த’ திரைப்படம் 20 நாட்களில் ஓடிடியில் ரிலீசாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ’டாக்டர்’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளியான 20 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது குறிபிடத்தக்கது.






















