சினிமா செய்திகள்
அஜித்தின் ‘வலிமை’ படத்தின் அட்டகாசமான தீம் மியூசிக் ரிலீஸ்!
Published
1 year agoon
By
Shiva
அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று ‘வலிமை’ படத்தின் தீம் மியூசிக் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சற்று முன்னர் ‘வலிமை’ படத்தின் தீம் மியூசிக் வெளியாகிஉள்ளது.
யுவன்சங்கர்ராஜா அட்டகாசமாக கம்போஸ் செய்த இந்த தீம் மியூசிக்கை ரசிகர்கள் வசித்து வருகின்றனர் என்பதும் இது குறித்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலிமை’ படத்தில் இதுவரை வெளியாகாத ஒரு சில காட்சிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனிகபூரின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், கார்த்திகேயா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘வலிமை’ திரைப்படம் இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறும் நிலையில் இந்த படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்த தீம் மியூசிக் வெளியான பிறகு எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
நாயகியாகும் உலக அழகி, படப்பிடிப்புக்கு முன்பே பிசினஸ்: அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் மாஸ் தகவல்கள்!
-
துணிவு விமர்சனம்: கிளைமேக்ஸ் வரைக்கும் நல்லா தானே போச்சு; கடைசியில எச். வினோத்துக்கு என்ன ஆச்சு?
-
’துணிவு’: வங்கி கொள்ளையில் இவ்வளவு விஷயம் சொல்ல முடியுமா? அஜித்தை வைத்து மாஸ் செய்த எச் வினோத்!
-
சபரிமலை செல்லும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிக்கல்: அதிரடி உத்தரவு
-
’துணிவு’ ‘வாரிசு’ படங்களின் அதிகாலை சிறப்பு காட்சி ரத்து: தமிழக அரசின் கண்துடைப்பு உத்தரவா?