தமிழ்நாடு
துபாயில் இருந்து திரும்பியதும் பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் ஆக தனது குடும்பத்தினருடன் சென்ற நிலையில் துபாயில் இருந்து திரும்பி வந்ததும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி டெல்லியில் கலைஞர் அறிவாலயம் திறக்கப்பட உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு சோனியா காந்தி உள்பட பல முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் கொடுக்க பட்டுள்ளார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கலைஞர் அறிவாலயம் திறக்க டெல்லி செல்லும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மார்ச் 31-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தெரிகிறது. பிரதமர் மோடியை சந்தித்த பின் மறுநாள் ஏப்ரல் ஒன்றாம் தேதி கலைஞர் அறிவாலயம் திறப்பதாகவும் அதனை அடுத்த நாள் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .
எனவே முதல்வரின் மூன்று நாள் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















