இந்தியா
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்: அரசியலில் இருந்து ஒதுங்குகிறார்களா நேரு குடும்பத்தினர்?

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தினரே தலைமை பதவியில் இருந்துவரும் நிலையில் நேரு குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு புதிய இளம் ரத்தம் பாய்ச்சும் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் காங்கிரஸ் கட்சியை மீள முடியும் என்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தோல்வி குறித்த இந்த ஆலோசனையில் வலுவான தலைமை வேண்டும் என்பதற்கு முதல் உரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது .
குறிப்பாக நேரு குடும்பத்தினர் பகுதி நேரமாக தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்றும் முழுநேர அரசியலில் ஈடுபடும் ஒரு இளம் ரத்தம் கொண்ட தலைவர் வேண்டும் என்றும் வலுவாக குரல் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சசிதரூர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .
காங்கிரஸ் கட்சியை சீரமைப்பு களை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்று இப்போதாவது நம் மக்கள் நம்பிக்கையை பெறக்கூடிய திட்டங்களை முன் வைக்காவிட்டால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும் என்றும் சசி தரூர் கூறியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது .
காங்கிரஸ் கட்சியிலிருந்து நேரு குடும்பத்தினர் விலகி ஆலோசனை சொல்லும் கெளரவ தலைவராக மட்டும் இருந்து கொள்ளலாம் என்றும் பெரும்பாலான காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர. காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகி பல்வேறு கட்சிகளில் இணைந்து விட்டதால் காங்கிரஸ் பலவீனம் ஆகிவிட்டது என்றும் இனிமேலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.


















