தமிழ்நாடு
கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இது குறித்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் நேற்று விடிய விடியப் சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் இன்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வந்த தகவலின்படி விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை என்றும் அதேபோல் கொடைக்கானலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக இன்றும் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.













