இந்தியா
உ.பி கலவரத்தை நடத்தியவருக்கு ரூ.5 லட்சம் உதவி.. யோகி பகீர் அறிவிப்பு!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீசால் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நபர் கலவரத்தில் பலியாகிவிட்டதால் அவரின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் கலவரத்தை முன்னின்று நடத்திய நபர்களின் ஒருவனின் குடும்பத்திற்கு எதற்கு நிதி உதவி என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
நேற்று முதல்நாள் உத்தர பிரதேசத்தில் மாஹா என்ற கிராமத்தில் பசுக்காவலர்கள் பெரிய கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் பசுக்காவலர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.இந்த நிலையில் கலவரத்தில் உயிரிழந்த இவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை அம்மாநில அரசு வழங்கி இருக்கிறது.
இதற்கான தொகையை இன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார். இந்த சம்பவம் அங்கு நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. கலவரத்தை முன்னின்று நடத்திய ஒருவரின் குடும்பத்திற்கு பணம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டு இருக்கிறார்கள்.


















