சினிமா செய்திகள்
விரலோடு உயிர்கூட கோர்த்து… விக்னேஷ் சிவன் – நயன் நிச்சயதார்த்தமா?

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நயன்தாரா கையில் ஒரு பிளாட்டினம் மோதிரம் அணியபட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் கேப்ஷனாக விக்னேஷ் சிவன் ’விரலோடு உயிர் கூட கோர்த்து’ என்றும் பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து இது விக்னேஷ் சிவன், நயன்தாராவின் நிச்சயதார்த்த மோதிரம் தான் இது கூறப்படுகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் இதன்மூலம் தெரிய வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் விக்னேஷ், நயன் ஆகிய இருவருக்கும் திருமணம் எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
























