கிரிக்கெட்
டி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் முதல் முறையாக ஷிக்கர் தவன் சதம் அடித்துள்ளார்.
34 வயதான ஷிக்கர் தவான், 2007-ம் ஆண்டு, ஏப்ரல் 3-ம் தேதி டி20 போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.
இதுவரை 268 டி20 போட்டிகளில் ஷிக்கர் தவான் விளையாடியுள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான டி20 போட்டியில், டெல்லி அணி சார்பாக விளையாடிய ஷிக்கர் தவான் 57 பந்துகளில் 100 ரன்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2019-ம் ஆண்டு ஐபில் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 97 ரன்கள் அடித்து இருந்ததே, டி20 போட்டிகளில் தவான் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.


















