இந்தியா
இந்தியாவின் முதல் இசை சாலை – எங்கே தெரியுமா?

நாமெல்லாம் சாலை மார்க்கமாக பயணம் செய்தால் மொபைலிலிருந்து பாட்டுக் கேட்டுக் கொண்டோ அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது பிரத்யேக ரேடியோ செட்டுகளை வைத்து பாடல் கேட்டுக் கொண்டோ செல்வோம்..
ஆனால் இப்போது சாலையில் பயணம் செய்தாலே இசை ஒன்று உருவாகி நம்மை மகிழ்விக்கும் என்பதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும்தானே.
அப்படி ஒரு சாலை நமது இந்தியாவில் இப்போது அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பிறக்கும் இசையும் நம்ம ஏ.ஆர்.ரகுமான் பாடலாக இருக்கும்போது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே.
ஆமாம்… இந்தியாவின் முதல் இசை சாலையை அறிமுகம் செய்து நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது மும்பை மாநகராட்சி நிர்வாகம். இந்த சாலை மும்பையின் சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் கடற்கரை செல்லும் சாலையின் 500 மீட்டர் அதாவது அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த நவீன சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இசை போன்ற ஒலிகளை உருவாக்கி எழுப்பம் பிரத்யேக ஸ்டிரிப்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில் கார் ஒன்று செல்லும்போது “ஆஜா ஆஜா ஜிந்தே“ என்ற நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் ஜெய்வேறா பாடல் ஒலிக்கிறதாம். அப்படி இந்த பாடல் ஒலிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறதாம்.
உங்களுக்கும் இப்படி ஒரு சாலையில் பயணம் செய்ய ஆசையாக இருக்கிறதா? ஜாலியா ஒரு டிரிப் போய் வாங்க மும்பைக்கு…











