ஆன்மீகம்
2026 விஷபோதக யோகம்: பிப்ரவரி முதல் இந்த 3 ராசிகளுக்கு சோதனை காலம் தொடக்கம்!

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரியம், ஆற்றல் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். செவ்வாய் பகவான் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில், 2026 பிப்ரவரி 23 காலை 11:57 மணிக்கு செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்து, ஏப்ரல் 2, 2026 வரை அதே ராசியிலேயே பயணிக்கவுள்ளார்.
ஏற்கனவே கும்ப ராசியில் பாவ கிரகமாக கருதப்படும் ராகு பகவான் இருப்பதால், செவ்வாய் மற்றும் ராகு இணைவால் சக்திவாய்ந்த ஆனால் எதிர்மறை பலன் தரக்கூடிய விஷபோதக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம், மன அழுத்தம் மற்றும் நிதி சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும் என்று ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.
இந்த விஷபோதக யோகத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ராசிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
♈ மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு விஷபோதக யோகம் சில சோதனைகளை ஏற்படுத்தும். 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாய்–ராகு இணைவு ஏற்படுவதால், எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறாமல் போகலாம். சிறிய காரியங்களுக்குக் கூட அதிக முயற்சி தேவைப்படும். பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே ஏழரை சனி நடைபெற்று வருவதால், உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் தந்தையின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் அவசியம்.
♐ தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 3ஆம் வீட்டில் செவ்வாய்–ராகு சேர்க்கை நடைபெறுகிறது. இதோடு அர்த்தாஷ்டம சனி காலமும் நடந்து வருவதால், ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மன அழுத்தம், சோர்வு, குழப்பம் அதிகரிக்கலாம். தொழிலில் நஷ்டம், முதலீடுகளில் இழப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது. குடும்ப விஷயங்களில் பொறுமையும், பேச்சில் நிதானமும் மிகவும் அவசியம்.
♑ மகரம்
மகர ராசியின் 2ஆம் வீடான தன ஸ்தானத்தில் விஷபோதக யோகம் உருவாகிறது. இதனால் பண இழப்புகள், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். முதலீடுகள் செய்வதற்கு முன் நன்கு சிந்திக்க வேண்டும். உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள், கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனை மற்றும் வாகன ஓட்டத்தில் அதிக எச்சரிக்கை தேவை.























