செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படுமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – புதிய பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய்?
சென்னை: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai) புதிய பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளிவரவுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான பெண்கள் தினசரி மனுக்களை ஸ்டாலின் முகாமில் அளித்து வருகின்றனர்.
📌 விண்ணப்பங்கள் மற்றும் பரிசீலனை
இத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் வரை ஏற்கப்படும்.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் அரசு மூலம் தேதி வாரியாக பிரித்து பரிசீலிக்கப்படுகின்றன.
தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, புதிய பயனாளிகள் பட்டியல் நவம்பர் மாதத்திற்குள் உருவாக்கப்படும்.
📌 பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய்?
கடந்த முறை போலவே, இந்த முறையும் அரசு ஒட்டுமொத்தமாக பட்டியலை வெளியிட உள்ளது.
புதிய பயனாளிகளுக்கான தகவல் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க அரசின் திட்டம் இருப்பதாகத் தெரிய வருகிறது.
சமீபத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “புதிய பயனாளிகளுக்கு இன்னும் ஒரிரு மாதங்களில் நல்ல செய்தி வரும்” என குறிப்பிட்டிருந்தார்.
📌 பெண்களுக்கு பெரிய குட் நியூஸ்
இதனை வைத்து பார்க்கும்போது, இந்த ஆண்டு பொங்கலுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் குறித்து அரசு பிரம்மாண்ட அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி மற்றும் உரிமைச் சான்று பொங்கல் பரிசாக காத்திருக்கிறது.




















