வணிகம்
TCS நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு – 80% பேருக்கு நன்மை!
Published
9 மாதங்கள் agoon
By
Poovizhi
TCS நிறுவன ஊழியர்களுக்குப் பெருநல்யாக சம்பள உயர்வு – 80% ஊழியர்கள் பயனடைய உள்ளனர்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் ஊழியர்களில் 80% பேருக்குச் சம்பள உயர்வை அறிவித்துள்ளது. இந்தச் salary hike அறிவிப்பு, கடந்த சில வாரங்களில் 12,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு குறித்து TCS நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “சி3ஏ (Associate Consultant) மற்றும் அதற்கும் கீழ்வரிசை பதவிகளிலும் பணியாற்றும் தகுதியுள்ள அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இது மொத்த ஊழியர்களில் 80% பேரை உள்ளடக்கும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு, ஐந்து மாதங்கள் தாமதமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. TCS நிறுவனம் தாமதத்துக்கான காரணமாக மாற்றம் மற்றும் உறுதியில்லா வணிக சூழலை குறிப்பிடியுள்ளது.
இந்த உயர்வு பயிற்சியாளர்கள் முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட Associate Consultants வரையிலான ஊழியர்களுக்கு பொருந்தும். எனினும், மீதமுள்ள 20% மூத்த நிலை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்தியாவின் $283 பில்லியன் டாலர் மதிப்புடைய IT துறையில் தற்போது சர்வதேச நிலவரங்களால் உருவான தேவைக் குறைவு, பணவீக்கம் மற்றும் வர்த்தகக் குழப்பங்கள் காரணமாக தொழில் எதிர்நோக்கி வருகிறது. இந்த சூழலில், ஊழியர்களுக்கு உற்சாகம் தரும் இந்த TCS முடிவு மிக முக்கியமானது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















