வேலைவாய்ப்பு
தமிழக அரசு கல்லூரிகளில் 574 கெளரவ விரிவுரையாளர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஆகஸ்ட் 4 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசு கல்லூரிகளில் 574 கெளரவ விரிவுரையாளர் பணியிடம் – விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 4!
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 574 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 4, 2025 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பாடப்பிரிவுகள்:
தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், வேதியியல், தாவரவியல், புவியியல், வரலாறு, பொது நிர்வாகம், உளவியல், சமூகவியல், வணிகம், தொழில் நிர்வாகம், உயிர் தொழில்நுட்பம், கடல் உயிரியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள், உடற்கல்வி, அரசியல் அறிவியல், விலங்கியல் உள்ளிட்ட 34 பாடப்பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
தகுதி:
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி அதிகபட்சம் 57 வயது.
கல்வித்தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (SC/ST/PWD – 50%).
மேலும், Ph.D முடித்திருப்பது அல்லது UGC NET / SLET / SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
நியமிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.25,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். வேலை 11 மாதங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் உயர் கல்வித்துறையின் புதிய இணையதளம் வழியாக ஆகஸ்ட் 4, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தேர்வு செய்யப்பட உள்ள மாவட்டங்கள்:
மொத்தம் 38 மாவட்டங்களில் இந்த நியமனம் நடைபெற உள்ளது.
முக்கிய குறிப்பு:
சுமார் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தற்போது டிஆர்பி அறிவிப்பு வெளியாகி இருந்தும் தேர்வு நடைபெறாததால், கல்வி தேவையை பூர்த்தி செய்ய இந்த கெளரவ விரிவுரையாளர்கள் பணியில் நியமிக்கப்படுகிறது.












