பல்சுவை
போகி பண்டிகை அல்லது காணும் பொங்கலின் போது சுவையான “மட்டன் தண்ணி குழம்பு” செய்வது எப்படி?

போகி பண்டிகை அல்லது காணும் பொங்கலின் போது, பலர் சுவையான மட்டன் விருந்து தயாரிக்க விரும்புகிறார்கள். அந்த வகையில், “மட்டன் தண்ணி குழம்பு” ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மட்டன் தண்ணி குழம்பு செய்முறை:
தேவையான பொருட்கள்:
- மட்டன் – 500 கிராம்
- சின்ன வெங்காயம் – 150 கிராம்
- தக்காளி – 2
- தேங்காய் – அரை மூடி
- சோம்பு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- கசகசா – அரை டீஸ்பூன்
- முந்திரி – 6
- கறிவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
- பச்சை மிளகாய் – 2
- குழம்பு மிளகாய் பொடி – 3 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தாளிக்க
செய்முறை:
- மட்டனை நன்கு சுத்தம் செய்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் 5-7 விசில் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து, பாதி சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு வதக்கி, ஆறவிட்டு அரைத்து கொள்ளவும்.
- தேங்காயைத் துருவி பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, மீதமுள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அதில் தக்காளி-வெங்காயக் கலவையைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், வெந்த மட்டனை அதன் சூப்புடன் சேர்க்கவும்.
- மஞ்சள் பொடி, கொத்தமல்லி பொடி, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதிக்கும் போது, அரைத்து வைத்த மசாலா பொடி மற்றும் தேங்காய் பால் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
இந்த சுவையான மட்டன் தண்ணி குழம்பை இட்லி, தோசை, வெண் பொங்கல் அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.

















