செய்திகள்
திமுக – பாஜக கூட்டணியைச் சுற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன!

திமுக – பாஜக கூட்டணி பற்றி தொடரும் சர்ச்சைகள்!
திமுக – பாஜக ரகசிய உறவு குறித்து அதிமுக தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கலைஞர் 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவை அதிமுக தலைவர்கள் குற்றமாக சுட்டிக்காட்டி, திமுக – பாஜக கூட்டணி பற்றி கேள்விகள் எழுப்புகின்றனர். குறிப்பாக, திமுக நிகழ்ச்சிக்கு எதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வர வேண்டும்? கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விகள் எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக, முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜகவுடன் கொள்கை ரீதியாக எந்த உறவும் இல்லை என்று கூறியிருந்தாலும், சர்ச்சைகள் இன்னும் தொடர்கின்றன.























