இந்தியா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு துணைப் பொதுச் செயலாளர் திருமதி.கனிமொழி எம்பி தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகள் அறிவித்துள்ளார்.
இக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் விவரம் வருமாறு
கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகிய 3 அமைச்சர்களும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், டாக்டர் எழிலன், நாகநாதன் ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களும் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் தமிழரசி சிவக்குமார் ஆகியோருடன் முன்னால் எம்பிக்கள் எம்.எம்.அப்துல்லா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருடன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.சந்தானம் மற்றம் கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டறிந்து திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.






