இந்தியா
ஜி.எஸ்.டி.பில் செலுத்துபவரா நீங்கள்? இகேஒய்சி சரிபார்த்தீர்களா? உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம்!!!!

ஜி.எஸ்.டி. பில் செலுத்தும் வணிகப் பிரிவினரா நீங்கள்? நீங்கள் உங்கள் ஜி.எஸ்.டி. பக்கத்தை திறக்கும்போது ஆதார் தொடர்பான அறிவிப்புகள் வந்து நிற்கிறதா? நீங்கள் உடனடியாக ஆதார் அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அல்லது கூட்டாளர் புரமோட்டர் மற்றும் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரரின் இகேஒய்சி ஆவணங்களை பதிவேற்றி அங்கீகாரம் பெறுங்கள். இதனை தள்ளிப் போட்டாலோ பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டாலோ உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படுவதுடன் ஒட்டுமொத்த வணிகமும் ஸ்தம்விக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
மேலும், சமீப காலமாக செய்தித்தாள்களில் ஜி.எஸ்.டி வரி நிலுவைக்காக வங்கி கணக்குகளை முடக்கும் நோட்டீஸ்கள் தொடர்பான செய்திகள் சகஜமாகி விட்டன. சாதாரண கூலித் தொழிலாளிகள், குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள்ஜி.எஸ்.டி ஆர்.சி. பெற்று வணிகம் செய்வதாகவும் பல கோடி ரூபாய் வரி நிலுவை செலுத்த வேண்டும் எனக் கூறி வங்கி கணக்குகள் முடக்கப்படும் செய்திகள் சகஜமாசி விட்டன.
வணிகம் செய்யாத அல்லது வணிகத்துக்கே சம்பந்தமே இல்லாத நபர்களின் ஆதார், பான்கார்டு போன்ற ஆவணங்களை தவறாக பயன்படுத்தி போலியான ஜி்எஸ்.டி. பதிவெண் பெற்று வணிகம் நடத்தி ஒரு சிலர் மோசடி செய்தள்ளனர். இதனால் இப்போது விழித்துக்கொண்ட ஜி.எஸ்.டி. துறை அணைவருக்கும் ஆதார் அங்கீகார முறையை கட்டாயமாக்கியிருக்கிறது.
நீங்கள் உங்கள் ஜி.எஸ்.டி. பக்கத்தைத் திறக்கும்போது ”Would you like to Authenticate Asdhaar or Upload EKYC Documents of Partner / Promoter and Primary Authorized Signatory?” என்று கேட்கும். இதுவரை ஆதார் அங்கீகாரம் முழுமை செய்யாதவர்கள் இவற்றை சரிபார்த்த பின்னரே ஆர்.சி. வழங்கப்படும் அல்லது அங்கீககரிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறையால் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் வருவது குறையும். இதற்கு மக்கள் யாரும் தங்களது ஆதார் பான்கார்டு விவரங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. எனவே விழிப்புடன் இருந்து இத்தகைய மோசடியில் சிக்காமல் உங்களை பாதுகாத்தக் கொள்ளுங்கள்.







