ஆன்மீகம்
மீன ராசியுடன் ஒத்துப்போகாத ராசிகள்: மிதுனம் முதல் கும்பம் வரை யார் யார்? காரணங்களுடன் முழு விளக்கம்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியினரும் தங்களது கிரக நிலை, மனநிலை, குணாதிசயம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கிறார்கள். சில ராசிகள் ஒருவருக்கொருவர் சிறப்பாக பொருந்தினாலும், சில ராசிகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிராக இருந்து இணக்கமாக இயங்க முடியாது.
அந்த வகையில், உணர்ச்சிவசப்பட்டதும், ஆழ்ந்த சிந்தனை கொண்டதும், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பதும் போன்ற பண்புகளால் விளங்கும் மீன ராசியினருடன் பொதுவாக ஒத்துப்போகாத ராசிகள் யாவை? என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர்.
🔸மீன ராசியுடன் ஒத்துப்போகாத ராசிகள் – காரணங்களுடன்
1. மிதுனம்
மிதுன ராசியினர் சுதந்திரத்தை விரும்புபவர்கள். ஒருவரின் மீது அதிகமாக சார்ந்திருப்பதையும் கட்டுப்பாட்டையும் பிடிக்காதவர்கள்.
மீன ராசியினரின் உணர்ச்சிகள் அவர்களுக்கு ‘பாரம்’ போலத் தோன்றும்
ஒரே தாளத்தில் நடக்க முடியாததால் உறவில் சிக்கல்கள் ஏற்படும்
இணக்கம் வேண்டுமெனில், மீன ராசியினர் விட்டுக்கொடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
2. தனுசு
தனுசு ராசியினர் மனதில் உள்ளதை நேரடியாகச் சொல்லும் விதத்தில் பழகுபவர்கள்.
உண்மையை முகத்தில் சொல்வதால் மீன ராசியினர் உடனே காயப்படுவர்
உணர்ச்சி மற்றும் தர்க்கம் மோதுவதால் உறவில் குறைபாடுகள்
ஆனால், இருவருக்கும் சிந்தனை திறன் சிறப்பாக இருப்பதால் நேரடியாக பேசி பிரச்சனையை தீர்க்க முடியும்
3. துலாம்
துலாம் ராசியினர் பணியில் தீவிரம் காட்டுபவர்கள், இலக்கை அடைய எந்த வரையரைக்கும் செல்ல விரும்புவார்கள்.
விதிமுறைகள், ஒழுக்கம், ஒற்றுமை – மீன ராசியினர் விரும்பும் இவை துலாமில் குறைவு
விட்டுக்கொடுத்துச் செல்வது மீன ராசியில் இருப்பது போல துலாமில் இல்லை
இதனால் கருத்து மோதல்கள், விவாதங்கள் அதிகமாக இருக்கும்.
4. மேஷம்
மேஷமும் மீனமும் “ஊடல்–கூடல்” நிறைந்த ராசி சேர்க்கை.
இருவருக்கும் பொருந்தாத விருப்பங்கள்
போட்டி மனப்பான்மை அதிகம்
அடிக்கடி வாக்குவாதம்
இருவரும் ஒன்றாக இருக்கும் போது எலி–பூனை ராசி ஜோடி போல் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
5. சிம்மம்
சிம்ம ராசியினர் ஆளுமை, ஆதிக்கம் ஆகியவற்றை விரும்புபவர்கள்.
தன்னாட்சி விரும்பும் மீன ராசியினருக்கு இது பிடிக்காது
சிம்ம ராசியின் கட்டுப்பாட்டு போக்கு மீன ராசியினருக்கு வெறுப்பு ஏற்படுத்தும்
சிறந்த உறவிற்காக வெளிப்படையான பேச்சும் பரஸ்பர மதிப்பும் அவசியம்.
6. கும்பம்
கும்ப ராசியினர் புதுமை, மாற்றம், புதுப்பிப்பு ஆகியவற்றை விரும்புபவர்கள்.
மீன ராசியினர் பாரம்பரியத்தை விரும்புபவர்கள்
இருவரின் வாழ்க்கை பாதை வேறுபடும்
இதனால் பொதுவான நேரம், பொதுவான விருப்பம், உணர்ச்சி இணக்கம் கிடைப்பது கடினம்.



