ஆன்மீகம்
சனி தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா? இந்த எளிய பரிகாரங்களை செய்து பார்த்தீர்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
சனி தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா? இந்த எளிய பரிகாரங்களை செய்து பார்த்தீர்கள்!
சனி கிரகம் மற்ற கிரகங்களுடன் ஒப்பிடுகையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவான் ஒரு ராசியில் குறைந்தபட்சம் 2.5 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை தங்கி இருக்கும் நிலையில் அதன் தாக்கம் மிகுந்து இருக்கிறது. குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகச் சனி ஆகிய காலகட்டங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன.
சனி கிரகம், முதியவர்கள், வறுமை, உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களை குறிக்கின்றது. அவர்களுக்கு உதவியாய் எளிய பரிகாரங்களை மேற்கொண்டால் சனியின் எதிர்மறையான தாக்கத்தை குறைக்க முடியும்.
சனி தோஷ பரிகாரங்கள்:
- தினமும் எள் சாதம்: சாதத்தில் எள் கலந்து சாப்பிடுவது சனியின் நன்மையைப் பெற உதவும்.
- சனிக்கிழமையில் அசைவம் தவிர்க்கவும்: சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட தவிர்க்க வேண்டும்.
- முன்னோர் வழிபாடு: முன்னோர் மற்றும் நீத்தவர்களுக்கு மறக்காமல் திதி கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- சனி பகவானின் வழிபாடு: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் நவகிரங்களின் சன்னதியில் நல்லெண்ணெய்யில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.
- சனி பகவானுக்கு அர்ச்சனை: கருங்குவளை, நீல நிற சங்குப்பூக்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யலாம்.
- கால பைரவர் வழிபாடு: சனியின் அதி தேவதை கால பைரவரை வழிபடுவது சனியின் தாக்கத்தை குறைக்கும்.
- சிவபெருமானுக்கு வழிபாடு: சிவபெருமானுக்கு வில்வ மர இலைகள் மற்றும் வன்னி மர இலைகளால் மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.
- பிறந்த ஜாதகத்தில் சனி தோஷம்: சனி தோஷம் உள்ளவர்கள், விநாயகர் மற்றும் சிவபெருமானை தொடர்ந்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.















