வணிகம்
வோடாபோன் – ஐடியா இணைவு வெற்றி.. இனி இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் இதுதான்!

வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய நிறுவனங்கள் சட்ட ஆணையத்தின் அனுமதியுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
இரண்டு நிறுவனங்களும் இணைந்ததினை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்பதில் இருந்து ஏர்டெல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் இணைந்ததினை அடுத்து வோடாபோன் ஐடியா என்று பெயர் மாற்றமும் பெற இருக்கிறது. வோடாபோன் ஐடியா கீழ் தற்போது 408 மில்லியன் சந்தாதார்களும், 32.2 சதவீத சந்தை வருவாய் பங்கும் உள்ளது.
இணைவிற்குப் பிறகும் இரண்டு நிறுவனங்களும் எப்போதும் போலச் சுதந்திரமாக இரண்டு நிறுவனங்களும் டெலிகாம் சேவையினை அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.










