இந்தியா
பெண்களுக்கு இனி நைட்-ஷிப்ட் கிடையாது: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

பெண்களுக்கு இனி நைட் சிப்ட் கிடையாது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வராக சமீபத்தில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் தொழிலாளர்கள் மாலை 7 மணிக்கு மேல் அதிகாலை 6 மணிக்குள் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதற்கு அனுமதி கிடையாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Night streets
ஒருவேளை பெண்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேலை பார்த்தால் அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான போக்குவரத்து ஆகியவை நிறுவனம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இரவு ஷிப்ட் காரணம் காட்டி பெண் தொழிலாளர்களை நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் இந்த விதிகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதல்வரின் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.