இந்தியா
இனி ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்.. யுஜிசி அதிரடி அறிவிப்பு!
இனி ஒரே நேரத்தில் 2 டிகிரிகளை படிக்கலாம் என பல்கலைக்கழக மானிய கழகமான யுஜிசி அறிவித்துள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரே நேரத்தில் 2 இளங்கலை பட்டங்கள், 2 முதுகலைப் பட்டங்கள், 2 டிப்ளமா படிப்புகளைப் படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு படிப்புகளையும் முழு நேர நேரடி கல்லூரி படிப்பாக அல்லது ஒன்று கல்லூரியில் ஒன்று தொலைதூர கல்வித் திட்டத்தில் அல்லது இரண்டும் தொலைதூர கல்வித் திட்டத்தில் படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தில் எம்.பில், பி.எச்.டி படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க முடியாது.