சினிமா செய்திகள்
ரிலீஸான 50 நாட்களில் சாதனைகளை உடைத்தெறிந்த ஆர்யாவின் ‘டெடி’!

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் 50 நாட்களுக்கு முன்னர் ‘டிஸ்டி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘டெடி’.
வித்தியாசமான கதைக் களத்திற்காகவும், அட்டகாசமான அனிமேஷன் காட்சிகளுக்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரைக் கவர்ந்தது ‘டெடி’. திரைக்கதையில் சற்று தொய்வு இருந்தாலும் காட்சி அமைப்புகள் மூலம் படத்தின் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன், பாராட்டுகளைப் பெற்றார்.
இதன் காரணமாக படம் வெளியானது முதலே நல்ல விமர்சனங்கள் வந்தன. தற்போது இந்தப் படம் ரிலீஸாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஓடிடி தளத்தில் பல்வேறு சாதனைகளை உடைத்தெறிந்து உள்ளது என்று சினிமா துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
#Teddy creates record Views on @DisneyplusHSVIP in 50 Days!!#BlockbusterTeddy
Congrats @ShaktiRajan @arya_offl @sayyeshaa @actorsathish @immancomposer @madhankarky @ssakshiagarwal @StudioGreen2 @kegvraja @NehaGnanavel @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/iMWQYFc17E
— Ramesh Bala (@rameshlaus) May 1, 2021
சமீக காலக்கட்டத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஓடிடி திரைப்படம் ‘டெடி’ தான் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவியான சயீஷாவே நடித்திருந்தார். இமான் இசையமைப்பில் பாடல்களும் ஹிட் அடித்தன. சதீஷ், காமெடி ரோல் செய்திருந்தார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரித்து வெளியிட்டது.
முதலில் படத்தைத் திரையரங்கில் தான் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் கொரோனா காலக்கட்டத்தை கணக்கில் கொண்டு ஓடிடி தளத்தில் டெடி ரிலீஸ் செய்யப்பட்டது.



















