தமிழ்நாடு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 இல் வெளியாகும்: முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் எனக் காத்திருந்த மாணவ மாணவிகளுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. ஆனால், கோடை வெப்பத் தாக்குதலின் காரணமாக தேர்வு முடிவுகள் தள்ளிப் போகும் என எதிர்ப்பார்த்த நிலையில், வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இதன்படி www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய 3 இணைய தள முகவரியில் பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதி மொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால், மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.