செய்திகள்
தமிழ்நாடு அரசு மற்றும் A2B இணைந்து விற்பனை பிரதிநிதி இலவச பயிற்சி – மாதம் ரூ.15,000 சம்பளத்துடன் வேலை வாய்ப்பு!
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழ்நாடு அரசு மற்றும் அடையார் ஆனந்த பவன் இணைந்து, விற்பனை பிரதிநிதிகளுக்கான (Counter Sales Executive) இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை அறிவித்துள்ளது.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
காலம்: 48 நாட்கள் (240 மணிநேரங்கள்).
இடம்: சென்னை மற்றும் திருவாரூர்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி (பட்டதாரிகள் உட்பட அனைவரும் விண்ணப்பிக்கலாம்).
பாலின வரம்பு: இல்லாது.
வயது வரம்பு: இல்லை.
இந்த பயிற்சியில், வாடிக்கையாளர் சேவை, விற்பனைத் திறன்கள், சரக்கு மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுடன் திறம்பட பேசும் திறன், தயாரிப்புகளை விளக்கும் முறை, சில்லறை விற்பனை காட்சிப்படுத்தல் ஆகியவற்றிலும் கற்றுக்கொடுக்கப்படும்.
பயிற்சி முடித்ததும்:
பயிற்சி முடித்து வேலைக்கு சேர்ந்தால், மாதம் ரூ.15,000 வரையிலான சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது. சில்லறை கடைகள், ஷோரூம்கள், வாடிக்கையாளர் சேவை மையங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். விற்பனை மற்றும் மேலாண்மை துறையில் பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் உள்ளது.
விண்ணப்பிக்க:
✅ இணையதளம்: https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/74
✅ அல்லது புகைப்படத்தில் உள்ள QR கோட் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் (TNSDC) மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு முடித்து, நல்ல வேலை மற்றும் நிலையான சம்பளத்தை நாடுபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















