கிரிக்கெட்
“கிரிக்கெட் காதலர்களுக்கு அவமானம்!”- விராட் கோலி பற்றி ஷேன் வார்ன்

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது. பகலிரவு ஆட்டமான இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றம் கொடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி, அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார்.
கோலி, முதல் நாளான நேற்று அவுட்டான விதம் பலரை ஏமாற்றமடைய வைத்தது. அதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்னும் ஒருவர் ஆவார். கோலி, 180 பந்துகளுக்கு 74 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிக் கொண்டிருந்தபோது, மறுமுனையில் பேட்டிங் செய்து வந்தார் அஜிங்கியே ரஹானே.
நாதன் லயன் வீசியப் பந்தை அவர் அடித்துவிட்டு, ரன் ஓட முற்பட்டு நின்றுவிட்டார். ஆனால், கோலி ரன் ஓட்டத்தை நிறுத்தவில்லை. இதனால் கிடைத்த வாய்ப்பை லாவகமாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய அணி, அவரை ரன்-அவுட் செய்தது. நேற்று விராட் கோலி ஆடிய விதத்தால், அவர் எப்படியும் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிராபாரத விதமாக ரன்-அவுட்டாகி வெளியேறினார்.
Disappointing to see the great @imVkohli get run out ! You could tell when he walked to the crease he wanted a big innings and was super determined ! Such a shame for us cricket lovers https://t.co/Fj4qPmsqOb
— Shane Warne (@ShaneWarne) December 17, 2020
இது குறித்து வார்ன், ‘தி கிரேட் விராட் கோலி ரன் அட்டாகி வெளியேறியது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. அவர் கிரீஸுக்கு வரும்போதே, கண்டிப்பாக அதிக ரன் எடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் வந்தார் என்பதை உங்களால் சொல்ல முடியும். அந்தளவுக்கு அவர் முனைப்போடு இருந்தார். நம்மைப் போன்ற கிரிக்கெட் காதலர்களுக்கு அவர் அவுட்டானது மிகப் பெரிய ஷேம்தான்’ என்று வருத்தப்பட்டுள்ளார்.





















