கிரிக்கெட்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோசடியா? சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு டுவிட்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்றபோது குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி மிக எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. ராஜஸ்தான் அணி குஜராத் அணியிடம் சரணடைந்தது போல் தெரிந்தது.
இந்த முடிவை பார்த்து பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். லீக் போட்டியை விட மிகவும் மோசமான ஒரு போட்டியாக ஐபிஎல் இறுதிப்போட்டிஇருந்ததாக பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி சுப்பிரமணியம் சாமி ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோசடி நடந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகள் கூறி வருவதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக இருந்து வருகிறார் என்றும் இதுகுறித்து பொது நல வழக்கு தாக்கல் செய்வது அவசியமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சுப்பிரமணிய சுவாமியின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.