ஆன்மீகம்
2026 சனி நட்சத்திர மாற்றம்: கடகம், சிம்மம், மீனத்திற்கு அற்புத அதிர்ஷ்டம்!

ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் பொதுவாக தண்டனைகளை வழங்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சனி சரியான இடத்தில் அமைந்தால், அவர்கள் பெரும் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்றும் ஜோதிடம் கூறுகிறது.
2026 ஆம் ஆண்டில் சனிபகவான் மூன்று முக்கிய நட்சத்திர மாறுகளை செய்ய இருப்பதால், ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழப்போகின்றன.
ஜோதிடக் கணிப்புகளின் படி:
ஜனவரி 20, மதியம் 12:13 – உத்திரட்டாதி
மே 17, மதியம் 3:49 – ரேவதி
அக்டோபர் 9, காலை 7:28 – மீண்டும் உத்திரட்டாதி
இந்த மூன்று மாற்றங்களும் மீன ராசியில் நடைபெற இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு 2026 மிக அதிக அதிர்ஷ்டம் தரும் வருடமாக அமைவுள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2026 முழுவதும் சனிபகவான் நன்மைகளை வழங்குவார்.
பெரிய தடைகள் இல்லாத வருடமாக இருக்கும்.
நிதி நிலை பலமாகும்.
திருமணமாகாதவர்களுக்கு ஆண்டு இறுதியில் திருமண வாய்ப்பு.
நீண்டகாலம் நின்று போன பணிகள் மீண்டும் தொடங்கும்.
முதலீடுகள் செய்தால் சிறந்த லாபம் கிடைக்கும்.
நீதிமன்ற விஷயங்களில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
உடல் மற்றும் மனமும் வலிமையாகும்.
வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் தொழிலும் வாழ்க்கையிலும் முன்னேற்றம் கொடுப்பார்.
வேலையில் பதவி உயர்வு மற்றும் அங்கீகாரம் கிடைக்கும்.
புதிய வாகனம் வாங்கும் ஆவல் நிறைவேறும்.
மன அமைதி கிடைக்கும்; நீண்டகால குழப்பங்கள் முடிவுக்கு வரும்.
கல்வியில் முன்னேற்றம்.
வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள்.
தாய், தந்தை மற்றும் சனிபகவானின் முழு ஆதரவும் கிடைக்கும்.
வெற்றி அதிகரிக்கும் ஆண்டு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி லக்னத்தில் இருப்பதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
தம்பதிகள் உறவு வலுப்படும்.
நீண்ட பயண வாய்ப்புகள்.
வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் அகலும்.
வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபம்.
மாணவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டு.
பொருளாதாரம் பலப்படும்; சேமிப்பு அதிகரிக்கும்.
காதலை வெளிப்படுத்த விரும்புபவர்களுக்கு சாதகமான முடிவு.
சமூக மரியாதையும் அங்கீகாரமும் உயரும்.



















