தமிழ்நாடு
‘அடிச்சிபுடுவேன் பாத்துக்க…’- நிருபர்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; சர்ச்சை வீடியோ

தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தன் சொந்த தொகுதியில் போட்டியிடாமல் ராஜபாளையம் தொகுதிய்ல போட்டியிட உள்ளார் ராஜேந்திர பாலாஜி. தொகுதியில் அவருக்கு நல்ல பெயர் இல்லை என்பாதலேயே வேறு இடத்துக்கு மாறி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்களை மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான சர்ச்சையை ஏற்படுத்தும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜேந்திர பாலாஜியிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஒரு நிருபர், அமமுக பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது மிகவும் கோபமடைந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘அமமுக பற்றி என் கிட்ட கேட்டீங்கன்னா சப்புன்னு அடிச்சிபுடுவேன் பார்த்துக்க’ என்று வெளிப்படையாக மிரட்டுகிறார்.
இந்த சம்பவம் குறித்தான காணொலி:
TamilNadu Minister Rajendra Balaji threatens to slap reporters if asked about #AMMK to him.#TamilNaduElections2021 pic.twitter.com/tQJ8Yl5nb7
— Mugilan Chandrakumar (@Mugilan__C) March 19, 2021
சில நாட்களுக்கு முன்னர் ராஜேந்திர பாலாஜி, ‘
பாஜக இன்று நன்கு வளர்ந்துவிட்ட கட்சியாக இருக்கிறது. டெல்லியில் ஆட்சி செய்து வரும் மோடியைப் பார்த்து, உலக வல்லரசு நாடுகளே அச்சப்படுகின்றன.
மோடியின் ஆட்சியால், உலகெங்கிலும் வாழும் இந்திய மக்கள் பெருமை கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நல்லாட்சியையும், வலிமையான தலைமையையும் பாஜக இன்று கொண்டுள்ளது’ என்றார்.


















