இந்தியா
வீட்டை காலி செய்யும் ராகுல் காந்தி: உருக்கமான பதில் கடிதம்!

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தனது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய நாடாளுமன்ற மக்களவை வீட்டுவசதி குழு துணை செயலாளர் மோகித் ராஜன் கடிதம் எழுதினார். இதற்கு ராகுல் காந்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

#image_title
மோகித் ராஜன், ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், 17-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்த நீங்கள் மார்ச் 23-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டீர்கள். 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த கடிதத்திற்கு ராகுல் காந்தி பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், துக்ளக் லேன் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்திற்கு நன்றி. கடந்த 4 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இந்த பங்களாவில் மகிழ்ச்சியான நினைவுகளை பெற்றேன். எனது உரிமைகளுக்கு எந்தவித தடங்கலும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களுக்கு நிச்சயமாக கட்டுப்பட்டு அரசு பங்களாவை காலி செய்வேன் என கூறியுள்ளார்.