தமிழ்நாடு
கோடையில் பழங்களின் விலை அதிகரிப்பு: கவலையில் பொதுமக்கள்

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. கோடை வெயிலை சமாளிக்க பலரும் குளிர்ச்சியான பானங்களையே அதிகமாக விரும்புகின்றனர். ஆனால், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்வது தான் சிறந்த தீர்வாக அமையும். இந்நிலையில், வெளியில் செல்ல முடியாத அளவிற்கு அனல் காற்று இப்போதே வீசத் தொடங்கி விட்டது.
கோடை வெப்பத்தை தணிப்பதற்கு பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சுகள், பழங்கள் மற்றும் குளிர்பானங்களை சாப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக பழங்களின் விலை கடந்த சில வாரங்களை விடவும் அதிகளவில் உயர்ந்து காணப்படுகிறது. பழங்களின் இந்த விலை உயர்வால், பொதுமக்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.
உயரும் பழங்களின் விலை
ஈரோடு பழச் சந்தையில் இன்று இத்தாலி மற்றும் துருக்கி ஆப்பிள் ஒரு கிலோ ரூபாய் 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ. 120-க்கும், மாதுளை ஒரு கிலோ ரூ. 180 முதல் ரூ. 200 வரைக்கும் விற்பனையானது. மேலும், திராட்சை ஒரு கிலோ ரூ. 70-க்கும், ஒரு கிலோ ஆரஞ்சு ரூ. 120-க்கும், நாக்பூர் ஆரஞ்சு ஒரு கிலோ ரூ. 60 முதல் ரூ. 80-க்கும் விற்பனையானது. இதேபோல் சப்போட்டா ஒரு கிலோ ரூ. 40-க்கும், சாத்துக்குடி ஒரு கிலோ ரூ. 70-க்கும், பன்னீர் திராட்சை ஒரு கிலோ ரூ. 80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்ன தான் பழங்களின் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், கோடை வெப்பத்தில் இருந்து விடுபட பொதுமக்கள் அனைவரும் வழக்கம் போல் பழங்களை வாங்கி செல்கின்றனர்.
சென்னையைப் பொறுத்த வரையில், பழங்களின் விலை சென்ற வாரங்களை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது. சென்னையில் பழங்களின் இன்றைய விலைப் பட்டியலை தற்போது பார்ப்போம்.
விலைப் பட்டியல் (ஒரு கிலோ)
- வாழைப்பழம் – ஏலக்கி – ரூ. 45
- வாழை – மலை – ரூ. 50
- வாழைப்பழம் – நெய்ந்திரம் – ரூ. 72
- வாழைப்பழம் – கற்பூரம் / தேன் – ரூ. 58.
- வாழைப்பழம் – மோரிஸ் – ரூ. 55
- வாழைப்பழம் – பூவம் – ரூ. 49
- ஆப்பிள் – சிம்லா – ரூ. 180
- ஆப்பிள் – புஜி (பிங்க்) – ரூ. 378
- கருப்பு திராட்சை (விதையுடன்) – ரூ. 198
- மொசும்பி – ரூ. 55
- கொய்யா – ரூ. 44
- ஆரஞ்சு – ரூ. 119
- சப்போட்டா – ரூ. 90
- மாதுளை – காபூல் – ரூ. 164
- தர்பூசணி (4 கிலோ) – ரூ. 258
- அன்னாசி (1 துண்டு) – ரூ. 45
- பப்பாளி (1 துண்டு) – ரூ. 55
- செவ்வாழை (1 துண்டு) – ரூ. 68