சினிமா செய்திகள்
அந்தாதுன் ரீமேக்: பிரசாந்த் கொடுத்த இசை விருந்து… வைரல் வீடியோ

பாலிவுட்டில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார்.
Merry Christmas to all my friends ! Here is a special treat from dear Prashanth sir. A very special journey begins here. We need your love and support. pic.twitter.com/jCDlrvJuZQ
— Santhosh Narayanan (@Music_Santhosh) December 25, 2020
இத்திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிறிஸ்துமஸ் விருந்தாக சந்தோஷ் நாராயணன் இசையில் முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ஆயுஷ்மான் வேடத்தில் பிரசாந்தும், தபு வேடத்தில் நடிகை சிம்ரனும் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தை இயக்குநர் ஜே ஜே ஃபெட்ரிக் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் பெயர் வருகிற புத்தாண்டு தினமான 01-01-2021 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.