ஆன்மீகம்
செவ்வாய் பெயர்ச்சி ஜூலை 28: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பணம், சொத்து, உன்னதமான வாய்ப்புகள்!

செவ்வாய் பெயர்ச்சி ஜூலை 28: 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் – பணவரவு, சொத்து, பதவி உயர்வு வாய்ப்பு!
2025 ஜூலை 28ஆம் தேதி செவ்வாய் கிரகம் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். செவ்வாய் நிலம், வீரம், சொத்து, தூண்டுதல் போன்றவற்றின் காரக கிரகமாக இருப்பதால், இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக, 5 ராசிக்காரர்கள் மிகுந்த நன்மைகளை பெற உள்ளனர்.
ஜோதிடக் கோணத்தில் இதனால் கேந்திர யோகம், திரி-ஏகாதச யோகம் போன்ற சுப யோாகங்கள் உருவாகின்றன. இது நிதி, வீடு, கல்வி, தொழில், பணிபுரியும் இடங்களில் வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை உருவாக்கும்.
✅ அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:
1. ரிஷபம்:
துனிச்சலான முடிவுகள் வெற்றியை தரும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு. சொத்து விவகாரங்கள் சாதகமாகத் தீரும்.
2. மிதுனம்:
வாகனம், மின்சாதனங்கள் வாங்கும் யோகம். தொழிலில் லாபம். புதிய வேலை வாய்ப்புகள் பெரும்.
3. கடகம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களிடம் இருந்து ஆதரவு. சொத்துகளில் முதலீடு லாபமாக முடியும்.
4. விருச்சிகம்:
வருமானம் அதிகரிக்கும். வேலை இடத்தில் மரியாதை உயரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.
5. மகரம்:
அதிர்ஷ்டம் முழுமையாக சேரும். ஆன்மீக போக்குகள் மேலோங்கும். பழைய முதலீடுகள் லாபம் தரும்.
🕉 செவ்வாய் கிரகத்தை களைமுடிக்க பரிகாரம்:
‘ஓம் வீரத்வஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பௌம: ப்ரசோதயாத்’ என்ற அங்காரக காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்தால் செவ்வாயின் கருணையை பெறலாம்.