கிரிக்கெட்
INDvAUS – அந்தரத்தில் டைவ் அடிச்சு ‘சூப்பர்மேன்’ கேச்… ஆஸி. பேட்ஸ்மேனை வீட்டுக்கு அனுப்பிய கிங் கோலி!
Published
2 years agoon
By
Barath
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது. பகலிரவு ஆட்டமான இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றம் கொடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி, அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார்.
கோலியைத் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேன்களும் அரைசதம் கூட எடுக்கவில்லை. துணை கேப்டன் அஜிங்கியே ரஹானே மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் செத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் மட்டும்தான் ஓரளவுக்காவது நிதானமாக விளையாடி, நாற்பது ரன்களையாவது தாண்டினார்கள். மற்றப்படி வேறு எந்த பேட்மேனும் சொல்லிக் கொள்ளும்படி நிலைத்து ஆடவில்லை. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி, 250 ரன்களைத் தாண்டாமல் ஆல்-அவுட்டாகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அடுத்து இறங்கிய ஆஸ்திரேலிய அணியும் ஆரம்பம் முதலே மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்துத் திணறி வருகிறது. இரண்டுவது நாள் ஆட்டத்தின் இரண்டு செஷன் முடிவடைந்தபோது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்தப் போட்டி மூலம் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார் கேமரான் கிரீன். அவர் 11 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ரவிச்சந்திரன் அஷ்வின் பவுலிங் செய்ய வந்தார். அஷ்வின் போட்ட பந்தை பவுண்டரிக்கு விரட்ட முற்பட்டு, லெக் சைடு சுற்றினார் கிரீன். ஆனால், ஷார்ட் மிட்விக்கெட் பகுதியில் நின்றிருந்த கேப்டன் கோலியைத் தாண்டி பந்து போகவில்லை.
தனக்கு வலது புறம் வந்த பந்தை சூப்பர்மேன் போல டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் கோலி. அந்த கேட்ச்சின் வீடியோ இதோ,
You may like
-
தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட்.. விராத் கோஹ்லியின் வீடியோ வைரல்
-
நாடு தாண்டிய காதல்.. இந்திய கிராமத்தை சேர்ந்த பெண்ணை கரம் பிடித்த ஆஸ்திரேலியர்!
-
ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.80 லட்சம் போனஸ் கொடுத்த முதலாளி அம்மா.. இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்!
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
-
சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய விராத் கோஹ்லி
-
U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய அணி!