கிரிக்கெட்
INDvAUS – ‘ஆமா.. இப்ப என்ன நடந்துச்சு!’- ஸ்டீவ் ஸ்மித்தை அலறவிட்ட பும்ரா பந்து
Published
2 years agoon
By
Barath
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா அணி 2 ரன் லீடிங்கில் மட்டுமே இருக்கிறது.
இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 326 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியே ரஹானே, சதமடித்து அசத்தினார். இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, பும்ரா பந்து வீச வந்தார். பொதுவாக க்ரீஸில் நகர்ந்து ஆடும் பழக்கம் கொண்டவர் ஸ்மித். இதை சுதாரித்துக் கொண்ட பும்ரா, அவரது லெக் ஸ்டம்பை நோக்கிப் பந்துவீசினார். அது ஸ்டம்ப் மீது உரசி, பெய்ல்ஸை சரியவைத்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்மித், அவுட்டானது கூட தெரியாமல் ரன் எடுக்க முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்தது முடிந்தது. இதனால் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார் ஸ்மித்.
இந்த அசத்தல் பந்து குறித்த வீடியோ இதோ:
You may like
-
வேலைநீக்க நடவடிக்கை.. அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இத்தனை ஆயிரமா?
-
ஒரே மாதத்தில் ஒரு பில்லியன்.. இந்தியாவில் ஆப்பிள் செய்த சாதனை!
-
நியூசிலாந்து வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி.. இதற்கு முந்தைய மோசமான தோல்வி சென்னையிலா?
-
உலகின் பழமையான நாடுகளின் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
-
349 ரன்கள் எடுத்தும் இந்தியாவை கதறவிட்ட பிரேஸ்வெல் .. நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நியூசிலாந்து!
-
தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட்.. விராத் கோஹ்லியின் வீடியோ வைரல்