உலகம்
நான் ஸ்பேம் என்றே நினைத்தேன்.. அதிகாலை 2 மணிக்கு வந்த வேலைநீக்க மெயில் குறித்து அமெரிக்க இந்தியர்..!

கூகுள் நிறுவனத்தில் இருந்து 12000 ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வேலை பறிபோன 12000 ஊழியர்களின் ஒருவரான அமெரிக்க இந்தியர் தனக்கு அதிகாலை இரண்டு மணிக்கு வேலை நீக்க நடவடிக்கை குறித்த மெயில் வந்தது என்றும் முதலில் அதை ஸ்பேம் என்றுதான் நினைத்தேன் என்றும் அதன் பிறகு தான் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டது உறுதியானது என்றும் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்
கலிபோர்னியாவில் உள்ள கூகுல் அலுவலகத்தில் இன்ஜினியரிங் தலைவராக பணியாற்றியவர் இந்தியாவை சேர்ந்த விஷால் அரோரா. கடந்த ஜனவரி 19ஆம் தேதி காலை 7 மணிக்கு தனது நிறுவனத்தின் ஊழியர்களுடன் மீட்டிங் நடத்திவிட்டு அதன் பிறகு அவர் தனது கார்ப்பரேட் காலண்டரை பார்க்க முயன்றபோது அவரது பாஸ்வேர்ட் வேலை செய்யவில்லை. இதன் பிறகு அவர் தனது தனிப்பட்ட ஜிமெயில் இன்பாக்ஸில் அதிகாலை 2 மணிக்கு ஒரு மின்னஞ்சலை கண்டார். அதில் உங்கள் வேலை பறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலில் தனது லேப்டாப் மூலம் தனது கூகுள் அக்கவுண்டுக்குள் செல்ல முயன்றார். ஆனால் நீங்கள் அனுமதிக்கப்படவில்லை என அதில் செய்தி வந்ததை அடுத்து தான் பணிநீக்கம் செய்யப்பட்டோம் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதிகாலை 2 மணிக்கு வந்த மின்னஞ்சலை பார்த்து முதலில் ஸ்பேம் என்றுதான் நினைத்தேன். அதன் பிறகு தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்த பின்பு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்

google layoff
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த போது எனக்கு கிடைத்த அற்புதமான நண்பர்களை பிரிவதில் நான் வருத்தப்படுகிறேன். நேரில் விடைபெறாமல் போனது எனக்கு மிகுந்த ஏமாற்றமாகவும் இருந்தது. கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டது எதிர்பாராதது என்று கூறிய அவர், இந்த அனுபவம் தனக்கு சில பாடங்களை கற்பித்து கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
என் மனைவிக்கு கூகுளில் சேர ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவர் அதற்கு எதிராக முடிவு எடுத்தார் என்றும் தற்போது அவர் பாதுகாப்பான வேலையில் இருப்பதால் எங்கள் வருமானத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது நிதி நடவடிக்கைகளை குறித்து குறிப்பிட்ட அவர் நான் கடந்த சில ஆண்டுகளாக எனது நிதியை மிகவும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்துள்ளதால் இப்போதைக்கு எனக்கு எந்த விதமான பொருளாதார பிரச்சனை இல்லை என்று கூறிய அவர் இருந்தாலும் வேலை பறிபோன மன அழுத்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.