கிரிக்கெட்
“இங்கி., அணியில் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் அதிகம்!”- டெஸ்ட் தொடருக்கு முன்னர் ஸ்டுவர்ட் பிராட் ஜாலி டாக்
Published
2 years agoon
By
Barath
வரும் பிபர்வரி 5 ஆம் தேதி, இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது. முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்காக இரு அணிகளும் சென்னையில் முகாமிட்டுத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பவுலர் ஸ்டுவர்ட் பிராட், சமீபத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர், ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தியதால், இந்திய அணியின் நம்பிக்கை என்பது வானளவு இருக்கும். ஒரு விஷயம் சொல்கிறேன். இந்திய – ஆஸ்திரேலிய கடைசி டெஸ்டின் போது, இந்திய அணிக்காக எங்கள் இங்கிலாந்து அணியிலேயே பலர் ஆதரவு தெரிவித்து வந்தார்கள். இந்திய அணியின் ரசிகர்கள் எங்கள் அணியில் மிக அதிகம்.
ஆனால், இரண்டே வாரத்தில் அவர்களின் எதிரியாக நாங்கள் களமிறங்கியுள்ளோம். இந்திய அணி சாதித்தது குறித்தும், அந்த அணியின் வலிமை குறித்தும் யோசித்துக் கொண்டே இருந்தால், எங்களால் வெற்றி பெற முடியாது. எனவே, எங்கள் வலிமைகளிலும் நாங்கள் கவனம் செலுத்தி விளையாட வேண்டும்’ என்று பேசியுள்ளார்.
இந்தியா – ஆஸ்., இடையிலான 4வது போட்டி ஹைலைட்ஸ்:
You may like
-
சூர்யகுமார் யாதவ்வின் சதம் வீண்: 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!
-
டெஸ்ட்டில் தோற்றாலும் டி20ல் கிங் என நிரூபித்த இந்தியா: தொடரை வென்று அசத்தல்
-
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அஸ்வின் இல்லை: அதிர்ச்சி காரணம்
-
முடிந்தது அஜித்தின் இங்கிலாந்து பயணம்: அடுத்து எந்த நாடு தெரியுமா?
-
95 வயதான எலிசபெத் ராணிக்கு கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி பிரார்த்தனை!
-
5வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை !