பல்சுவை
ஊரடங்கின் போது ஜாக்கிங் சென்றால் கொரோனா பாதிப்பு.. அனிமேஷன் வீடியோ!

ஊரடங்கின் போது ஜாக்கிங் சென்றால் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் இந்த விடியோவை உருவாக்கி, ஜக்கிங் செல்லும் போது கொரோனாவில் இருந்து நம்ம பாதுகாத்துக்கொள்வதற்கான வீடியோவாக இதை உருவாக்கியுள்ளார்கள்.
அதில், ஒருவருக்கு பின்னால் ஒருவர் ஜாக்கிங் செல்லும் போது கொரோனா எளிதாகத் தாக்கும். ஒருவர் பக்கத்தில் ஒருவர் ஓடும் போது கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் ஊரடங்கின் போது ஜாக்கிங், வால்க்கிங், ஜிம் போன்றவற்றுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.